எத்தனைக்காலம்தான்...களத்தில் குதித்தார் பிரசாந்த் கிஷோர்..

by Editor / 03-10-2022 09:37:20am
எத்தனைக்காலம்தான்...களத்தில் குதித்தார் பிரசாந்த் கிஷோர்..

பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் பிரசார தளம் ஒன்றை தொடங்கி உள்ளார். ஆனால் ,இதன் ஒரு பகுதியாக காந்தி பிறந்த தினமான நேற்று, பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிகர்வரா காந்தி ஆசிரமத்தில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்கினார். வழிநெடுகிலும் அவரை ஏராளமான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். அந்த வகையில் மாநிலம் முழுவதும் 3,500 கி.மீ. தொலைவுக்கு தனது ஆதரவாளர்களுடன் பாதயாத்திரை மேற்கொள்ளும் பிரசாந்த் கிஷோர், ஒவ்வொரு பஞ்சாயத்துகளுக்கும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். மேலும்இந்த யாத்திரை 12 முதல் 15 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Tags :

Share via