ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டி. ஜி. பி. ஹேமந்த் குமார் லோகியா கொலை

by Editor / 04-10-2022 11:35:10pm
ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டி. ஜி. பி. ஹேமந்த் குமார் லோகியா கொலை

ஜம்முவின் புறநகர்  பகுதியான உதய்வாலாவில் உள்ள தனது வீட்டில் சிறைத்துறை டி. ஜி. பி. ஹேமந்த் குமார் லோஹியா (57) பிணமாக கிடந்தார். அவரது உடலில் தீக்காயங்கள் இருந்ததாகவும், கழுத்து அறுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறைத்துறை டி. ஜி. பி.கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர் சந்தேகபடும்படியான நபர் அவரது  சடலத்தை தீயிட்டு கொளுத்த முயன்றுள்ளார். எனினும் அவரது வீட்டில் தீ பரவுவதைப்பார்த்த பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் வீட்டுக்குள் புகுந்து அவர் இருந்த அறையினுள் தீயில் இருந்து அவரது சடலத்தை கைப்பற்றினர்.கொலை செய்யபட்ட சிறைத்துறை டி. ஜி. பி.1992 பேட்ச் ஐ. பி. எஸ் அதிகாரிஎன்பதுகுறிப்பிடத்தக்கது.இவரை  கொலை செய்த பின்னர் குற்றவாளி வீட்டிலிருந்து ஓடி வருவது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.ஹேமந்த் குமார் லோஹியா கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார்.

இது குறித்து ஜம்மு மண்டல கூடுதல் டிஜிபி முகேஷ் சிங் கூறுகையில், இது சந்தேகத்திற்குரிய கொலை என்று முதல்கட்டமாக தெரிகிறது. லோகியாவின் வீட்டுவேலைக்காரரான யாசிர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடும் பணி தொடங்கியுள்ளதாகவும் ஏடிஜிபி தெரிவித்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீர் மானிலம் ராம்பன் மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஜி.பி. விட்டு வேலைக்காரனான யாசிராய் கைது செய்ய ஜம்முவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் போலீஸ்தனிப்படையினர்  சோதனைகளை நடத்திய நிலையில் யாசிர் கைது செய்யப்பட்டார்.

 யாசிர் குறித்து விசாரணையில் சந்தேகத்திற்க்குரிய யாசர் சுமார் 6 மாதங்களாக டி.ஜி.பி.வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். யாசிர் தனது நடத்தையில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்ததாகவும், மன அழுத்தத்தில் இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தரப்பில் முதல்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள நிலையில், ஜம்மு காஷ்மீரில் ஐ.பி.எஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags : சிறைத்துறை டி. ஜி. பி. கொலை

Share via