புதிதாக 1,771 பேருந்துகள் வாங்க முடிவு

by Staff / 11-10-2022 12:54:14pm
புதிதாக  1,771 பேருந்துகள் வாங்க முடிவு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 'பிஎஸ்-4' ரக பஸ்கள் வாங்கப்பட உள்ளன. இந்த ரகத்தில் 1,771 பஸ்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பஸ்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக்கழக மண்டலங்களுக்கு பிரித்து வழங்கப்படவுள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும் வழங்கப்பட உள்ளன. சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோவை மண்டலத்திற்கு 115 பேருந்துகளும், கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 251 பேருந்துகளும், நெல்லை மண்டலத்திற்கு 50 பேருந்துகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via