கோழை நரேந்திர மோடி பத்திரிகையாளர்களை சந்திக்க தயாரா

by Staff / 13-10-2022 12:58:49pm
கோழை நரேந்திர மோடி பத்திரிகையாளர்களை சந்திக்க தயாரா

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். அவரது இந்த பயணம் கன்னியாகுமரி, கேரளா, வழியாக கடந்த 30ம் தேதி கர்நாடகாவை அடைந்தது. இதற்கு போட்டியாக கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் நேற்று ஜன்சங்கல்ப் யாத்திரையை தொடங்கினர். ராய்ச்சூர் நகரில் ஜன்சங்கல்ப் யாத்திரையை தொடங்கி வைத்து பொதுக்கூட்டத்தில் பேசிய எடியூரப்பா; மோடி பிரபஞ்சம் போற்றும் நாயகனாக உள்ளார். அவரை பற்றி குழந்தை ராகுல் காந்தி பேசுவதா என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.எடியூரப்பாவின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "முதலில் கோழை நரேந்திர மோடி, பத்திரிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo