அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும் தளவாய்சுந்தரம் எம். எல். ஏ. வலியுறுத்தல்.

by Staff / 13-10-2022 03:34:36pm
அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும் தளவாய்சுந்தரம் எம். எல். ஏ. வலியுறுத்தல்.

கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய்சுந்தரம் விடுத் துள்ள அறிக்கையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இறச்சகுளம், தெரிசனங் கோப்பு, ஞாலம், சிறமடம், அருமநல்லூர் மற்றும் கடுக்கரை, காட்டுப்புதூர், திடல், கேசவன்பு தூர், தடிக் காரன்கோணம், கீரிப்பாறை போன்ற பகுதி களிலிருந்து பெரும்பா லான மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்கள் அரசு பேருந்து மூலமே நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். கொரோனா தொற்று காலத்தில் நிறுத் தப்பட்ட பஸ்கள், தற்போ தும் முறையாக இயக்கப் படாமல் உள்ளன. இரவு நேர பஸ்களை நிறுத்தி யதுடன் அடிக்கடி காலை மற்றும் மாலை நேரங் களிலும் பஸ்கள் ரத்து செய்யப் படுகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறச்சகுளம்-சாமி தோப்பு தடம் எண் 32 பஸ் பல மாத காலமாக நிறுத் தப்பட்டுள்ளது. இப்பகுதி பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்கின்ற பொதுமக்கள் வசதிக்காக தினமும் காலை 8. 15 மணிக்கு இயக்கப்பட்டு வந்த இறச்சகுளம் - நாகர்கோவில் சிறப்பு பேருந்தும் தற்போது நிறுத்தப்பட்டு உள்ளது. ராஜாக்க மங்கலம் ஒன்றி யத்திற்குட்பட்ட மணக்குடி, பொழிக் கரை, பள்ளம், புத்தன்துறை போன்ற மீனவ கிராம பகுதிகளுக்கு இயக்குப்பட்டு வந்த அரசு பேருந்துகள் முறையாக இயக்கப் படவில்லை. பொழிக்கரை நாகர்கோவில் தடம் எண் 38சி பஸ்சை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி நிறுத்தி உள்ளனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராமப்புற பஸ் களை முறையாக இயக்க வேண்டும். பஸ்களை முறை யாக பராமரிக்க வேண்டும். குமரி மாவட்டத்துக்கு புதிய பஸ்கள் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதிய கண்டக்டர்கள், டிரைவர்கள் நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.

 

Tags :

Share via