காமராஜர் பல்கலை பேராசியர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் அமைச்சர் பொன்முடி

by Staff / 14-10-2022 04:48:59pm
 காமராஜர் பல்கலை பேராசியர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும் அமைச்சர் பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு 53 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் பேராசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு அவர்களுக்கான பண பயன்கள் விரைவில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். பேராசிரியர்கள் அவ்வப்போது உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடுமாறும் அமைச்சர் கொட்டுகொண்டுள்ளார்.

கௌரவ விரிவுரையாளர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். கௌரவ விரிவுரையாளர் பணிக்கு நெட் செட் தேர்வில் வெற்றி பெற்று இருக்க வேண்டும் அல்லது பி. எச். டி. முடித்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே 4, 000 நிரந்தர மற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான இடம் உடனே நிரப்பப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அதன் பிறகு ஏற்படும் காலி இடங்களுக்கும் வெற்றி பெற்றவர்களே பணியமர்த்தப்படுவர் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.

 

Tags :

Share via