கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்த ஆண்டு தமிழர்கள் பங்கேற்க தடை

by Editor / 26-01-2022 02:26:58pm
கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்த ஆண்டு தமிழர்கள் பங்கேற்க தடை

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்த ஆண்டு தமிழர்கள் பங்கேற்க தடை, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் இலங்கை அரசு அறிவிப்பு.

ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்பின் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறுவைத்து வழக்கம்.

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு திருவிழா நிறுத்தப்பட்டது. பின்னர் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆலயத்தின் திருவிழாவில் தமிழகம்,கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தசுமார் 5ஆயிரம் பேர் கலந்துகொள்வது வழக்கமாக இருந்துவருகின்றது.சுமார் 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அந்த கோவில் திருவிழாவுக்கு செல்வார்கள்.ஆனால் இந்தாண்டு கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு  கொரோனா பரவலை காரணம் காட்டி தமிழக பக்தர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் கூறப்படுகின்றது. மேலும் கடந்த ஆண்டும் கொரோனா பரவலால் இந்திய பக்தர்கள் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாத நிலையில், 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது என்று அந்நாட்டில் இருந்து வெளியாகி உள்ள தகவல், மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

கச்சத்தீவு அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்த ஆண்டு தமிழர்கள் பங்கேற்க தடை
 

Tags : Tamils ​​banned from participating in Kachchativu Anthonyar Temple Festival this year

Share via