ரெப்போ வட்டி விகித சதவிகிதத்தில்   மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் 

by Editor / 06-08-2021 03:43:55pm
 ரெப்போ வட்டி விகித சதவிகிதத்தில்   மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் 


இந்தியாவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவிகிதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியது ,


இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அறிவிக்கப்படிருந்ததால்,  அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க அரசு தடை விதித்தது. சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடன் தவணையை திரும்பி செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகினர். பெரும்பாலான தொழில்கள் கொரோனா ஊரடங்கால் முடங்கிய நிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி கடன் தவணையை திரும்ப செலுத்த நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளித்தது .


 இந்தியாவில் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்தவித மாற்றமுமில்லை. வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3 சதவீதமாகவும் தொடரும். கொரோனா 2வது அலையின் தாக்கத்தில் இருந்து பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது.


பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிதிக் கட்டமைப்பு செயல்படுகிறது. 2022-23 முதல் காலாண்டுக்கான பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

Tags :

Share via