ஹிந்தியை நாங்கள் திணிக்கவில்லை, கற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து வருகிறோம்

by Editor / 15-10-2022 09:31:27pm
 ஹிந்தியை நாங்கள் திணிக்கவில்லை, கற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து வருகிறோம்

குற்றாலத்தில் கடந்த மூன்று நாட்களாக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் பண்டிட் தீனதயாள் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.  நிறைவு நாளான இன்றைய பயிற்சி முகாமில் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய விவசாய அணி தலைவர் ராஜ்குமார் சாகர் எம்.பி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய விவசாய அணி தலைவர் ராஜ்குமார் கூறியதாவது : 

பாரதிய ஜனதா கட்சி இந்தியாவை 8 மண்டலங்களாக பிரித்து மண்டல அளவில் பயிற்சிகள் நடத்துகிறது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 13, 14, 15 ஆகிய தேதிகளில் இந்த பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் தலைவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பாஜகவின் வளர்ச்சி, முக்கியத்துவம் குறித்து முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மோடி விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்து தரப்பட்ட மக்களுக்காகவும்,   தேசத்தின் முன்னேற்றத்திற்காக நாம் பாடுபடுகிறார். தமிழகத்தில் திமுக, குடும்ப முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறது. ஆனால் பாஜக இவ்வாறு இல்லை. ஹிமாச்சலம் குஜராத் மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி வரும். தமிழ்நாட்டில் மோடியை அதிக அளவு விரும்புகின்றனர் பா.ஜ.க குறித்து மக்கள் மெல்ல மெல்ல அறிய தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமையும். தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இது குறித்து வேளாண் அமைச்சரிடம் எடுத்துக் கூற உள்ளோம். ஸ்டாலின் தமிழகத்தில் மக்களை ஏமாற்றுகிற வேலையை செய்கிறார். ஸ்டாலின் (Failure) ஃபெயிலியர் முதல்வர் என்று தெரிவித்தார். பா.ஜ.க எல்லா மொழிகளையும் ஆதரிக்க கூடியது. தமிழில் அதற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஹிந்தியை நாங்கள் திணிக்கவில்லை, கற்றுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து வருகிறோம். திமுக தமிழகத்தில் தனிப்பட்ட அரசியல் செய்து வருகிறது, பாஜக எல்லோரையும் ஒருங்கிணைக்கும் விதமாக அரசியல் நடத்தி வருகிறது. விரைவில் மோடி தலைமையான பா.ஜ.க ஆட்சி தமிழகத்தில் அமையும். தமிழகம் மென்மேலும் வளரும் என்று தெரிவித்தார்.

இந்த பயிற்சி முகாமில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி தலைவர் நாகராஜ், பாண்டிச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் புகழேந்தி, பயிற்சி முகாமின் தலைவர் மற்றும் விவசாய அணி மாநில துணைத்தலைவர் எஸ் ஆர் தேவர், கோட்ட பொறுப்பாளர் கிருஷ்ணகுமார்,  கோட்ட அமைப்பாளர் கிருஷ்ணன்,தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன், விவசாய அணி மாவட்ட தலைவர் முத்துபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் விஜய் சேகர் ராகவன், மாவட்ட பொருளாளர் ஹரி ரங்கநாதன், மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் கந்தசாமி காளிராஜ், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் செந்தூர்பாண்டியன், முன்னாள் மாவட்ட தலைவர் பாண்டித்துரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via