பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை குறைக்க வாய்ப்பு இல்லை

by Editor / 20-06-2021 12:49:02pm
பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரியை குறைக்க வாய்ப்பு இல்லை

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை இப்போதைக்கு குறைக்க வாய்ப்பு இல்லை என தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ’பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை என்றும், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்தால் அதனை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுப்பது போன்றதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ’பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை தற்போது குறைக்க வாய்ப்பு இல்லை என்றும், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை தமிழ்நாடு அரசு குறைத்தால் அதனை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுப்பது போன்றதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் கிடைக்கும் வருவாய் 63 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அதனால் 4 பைசா மட்டுமே தமிழக அரசுக்கு கிடைக்கிறது என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 10 ஆக இருந்த வரியை 32.90 ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது என்றும் அந்த 32.90 வரியிலிருந்து 31.50ஐ மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது என்றும் ரூ.1.40 மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via