தேவர் குருபூஜைக்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை.

by Staff / 26-10-2022 12:23:35pm
 தேவர் குருபூஜைக்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் தேவர் ஜெயந்தி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது.கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவு நாளின் போது காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறிய வாகனங்கள் கண்காணிப்பு கேமராவின் அடிப்படையில் 25 நான்கு சக்கர வாகனங்கள், 6 இருச்சக்கர வாகனங்கள் என 31 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற வருகிறது. எனவும், தேவர் குருபூஜைக்கு மதுரை மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், 100 வாடகை வாகனங்கள் மூலமாக காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் எனவும்,தெரிவித்தார். 

 

Tags :

Share via

More stories

Logo