ராமாயனம்-ராமன் பிறந்தான்

by Admin / 07-11-2022 07:12:34am
ராமாயனம்-ராமன் பிறந்தான்


காலம் எனும் சக்கரம் தொடர்ச்சியாகச்சுழன்று கொண்டிருக்கின்றது. கிருதயுகம்,திரேதாயுகம்,துலாபரயுகம்,கலியுகம் என நான்கு யுகங்களில் நாம் கலியுகத்தில்  வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

பல்லாயிரம்  ஆண்டுகளுக்குமுன்பு திரேதயுகத்தில் ராமாயணம் நிகழ்ந்தது.புண்ணிய நதியாகிய கங்காநதிக்கு வடக்கே கோசலராஜ்யம் ஒன்று இருந்தது.கோசல நாட்டை சூரியகுல அரசர்கள்ஆண்டுவந்தனர்.

அவர்களுள் மனுச்சக்கரவர்த்தி ,இட்சவாகு ,ரகு ஆகியவர்கள்    குறிப்பிடத்தக்க  ஆளுமைஉடையலர்கள்.கோசல நாட்டு தலைநகர்.அயோத்தி.சூரிய குலத்து அரசர்களுள் மிகவும் சிறப்பும் புகழும் பெற்றவர் தசரத சக்கரவர்த்தி.அவர் பல  ஆண்டுகள்  செங்கோல் தரித்து சிப்பான  ஆட்சியை  மக்களுக்கு  வழங்கினார்.  

தசரத   சக்கரவர்த்திக்கு  கைகேயி ,கோசலை,சுமத்திரை என மூன்று துணைவியர் இருந்தனர்.னால்.மகப்பேறு மட்டும் மன்னனுக்கு வாய்க்கவில்லை.மனம் வருந்திய தசரன் யாகம் செய்தால்  ,பிள்ளை  பேறு வாய்க்கப் பெறும் எனும் ஆலோசனையை  ஏற்று அதற்கான ஏற்பாட்டை செய்ய முனைந்தான்அவ்வேளை,இலங்கையை இராவணன்  என்றொரு  அரக்கர் குலத்தோன் .ஆண்டு வந்தான்.

அவனுக்கு பத்து தலைகள்இருந்தன.இறை பலம் பெற வேண்டி  ,பிரம்மனை வேண்டி கடும் தவம்  புரிந்தான் .அவன் முன்  பிரம்மா தோன்றி,கேட்ட வரங்களைத் தந்தார். மிகுந்த வலிமை பெற்ற அவன் தேவர்கள் மீது படை எடுத்தான்.அவனை எதிர்த்து  நிற்க தேவர்களால்  முடியவில்லை


       தொடரும்.

ராமாயனம்-ராமன் பிறந்தான்
 

Tags :

Share via