தமிழகம் முழுவதும் போலி வங்கிகள் - 46 பேர் கைது. 56 லட்சம் ரூபாய் பணம் முடக்கம்.

by Editor / 08-11-2022 09:30:35pm
தமிழகம் முழுவதும்  போலி வங்கிகள் - 46 பேர் கைது. 56 லட்சம் ரூபாய் பணம் முடக்கம்.

தமிழகம் முழுவதும் போலியான வங்கியை நடத்தி வந்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு வருட காலமாக சென்னை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல் என 9 இடங்களில் போலியான ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற பெயரில் போலியான வங்கி நடத்தி வந்த கும்பலை போலீசார்கைதுசெய்துள்ளான்னர். கடந்த ஒரு ஆண்டாக இந்த வங்கி மூலம் ஏ.டி.எம்.கார்டுகள் கொடுக்கப்பட்டு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளராக சேர்க்கப்பட்டுள்ளனர். என்றும் நாளொன்றுக்கு 70 லட்சம் ரூபாய் வரை பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வந்துள்ளனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு மதுரை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இந்த வங்கி அனுமதியின்றி இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியில் இருந்து வந்த எச்சரிக்கையால் போலியான வங்கியை நடத்துவது பற்றி தெரிந்தது. போலியான கூட்டுறவு வங்கியை நடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளதாகவும் .தனியார் வங்கியின் டெபிட் கார்டை வாங்கி, போலியான வங்கியின் டெபிட் கார்டாக கொடுத்துள்ளனர். 56 லட்சம் ரூபாய் பணத்தை முடக்கி உள்ளதாகவும்,. இது தொடர்பாக இதுவரை 46 பேரை கைது செய்துள்ளதாகவும்,இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

 

Tags :

Share via