தமிழகத்தில் 10,11,12 ஆகிய 3 நாட்களுக்கு மஞ்சள்,ஆரஞ்ச் எச்சரிக்கை அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

by Editor / 08-11-2022 10:16:43pm
தமிழகத்தில் 10,11,12 ஆகிய 3 நாட்களுக்கு மஞ்சள்,ஆரஞ்ச் எச்சரிக்கை அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10,11,12 ஆகிய 3 நாட்களுக்கு மஞ்சள்,ஆரஞ்ச் எச்சரிக்கை அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.10ஆம் தேதி 16 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று பெய்து வருகின்றது இதன் காரணமாக வங்க கடலை ஒட்டி உள்ள பகுதிகளில் தாழ்வான காற்றழுத்தம் நிலை காரணமாக கனமழை பெய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக வரும் 10 தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி, அரியலூர் பெரம்பலூர், சிவகங்கை, பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

11ஆம்  தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வெள்ளூ,ர் கள்ளக்குறிச்சி, மற்றும் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலார்ட்  எச்சரிக்கையும்,புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சேலம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி, மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,


 12 ஆம் தேதி நாகபட்டினம்,மயிலாடுதுறை,கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வெள்ளூர், திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களுக்கும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கையும்.

 திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூ,ர் பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via