மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்:வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

by Editor / 11-10-2022 09:50:56am
மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்:வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது

சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டிய விவகாரத்தில் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட பாலாஜி கணேஷ் என்பவர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்நிலையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதான பாலாஜி கணேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via