விரைவில் தனிக்கட்சி:பாய்ச்சலுக்கு தயாராகிறார் ஓபிஎஸ்..? 

by Editor / 27-08-2023 09:41:24pm
விரைவில் தனிக்கட்சி:பாய்ச்சலுக்கு தயாராகிறார் ஓபிஎஸ்..? 

அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியில் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக செய்திகள் வருவது குறித்து கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், “சஸ்பென்ஸ், பொறுமையாக இருங்கள்” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இதனால் அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் பெயர், கொடி ஆகியவற்றை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஓபிஎஸ் திட்டத்தை முன்னதாகவே தெரிந்துகொண்டுதான் தென்மாவட்டங்களை மையம் வைத்துஇபிஎஸ் அணியினர் மதுரையில் மாநாடு நடத்தியதாகவும் பேசப்படுகிறது. மக்களவைத்தேர்தலுக்குமுன்னர் மவுனம் கலையட்டும்.

 

Tags : விரைவில் தனிக்கட்சி ops

Share via