சென்னையில் புதிய தலைமைச் செயலகம், ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்- தமிழக முதலமைச்சர் விஜய்
: இன்று சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சென்னையில் புதிய தலைமைச் செயலகம், ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டார். நவீன வசதிகளுடன் கூடிய உலக தரத்தில் ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் அவசியம் என்பதால் இருவது லட்சம் சதுர அடி பரப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்றும் 1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது நாமக்கல் கவிஞர் மாளிகையில் 30 துறைகள் இருப்பதாகவும் 6000 க்கு மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுவதன் காரணமாக இட நெருக்கடி ஏற்படுவதோடு அலுவலர்கள் பொறுப்புணர்வோடு வேலை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்பதனால் தற்போது இயங்கும் புனித சார்ஜ் கோட்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதின் காரணமாக அதில் எந்தவிதமான கட்டடங்கள் கட்டுவதற்கு வசதிகள் இல்லாத நிலையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் தற்பொழுது உள்ள புனித சார்ஜ் கோட்டை பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags :



















