போர் பதட்டத்தில் உக்ரைன் எல்லை. ரஷ்யாவிற்கு பதிலடி தர தயாராகும் அமெரிக்கா

by Admin / 05-02-2022 10:41:30am
போர் பதட்டத்தில் உக்ரைன் எல்லை. ரஷ்யாவிற்கு பதிலடி தர தயாராகும் அமெரிக்கா

உக்ரைனை தாக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ரஷ்ய ராணுவத்தினர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கத்திய நாடுகளின் நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைவதை ரஷ்யா கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த எதிர்ப்பை உக்ரைன் நிராகரித்துவிட்ட நிலையில் அந்நாட்டின் மீது ரஷ்யா எந்நேரமும் போர் தொடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைன் எல்லையில் ஒரு லட்சம் வீரர்களை ரஷ்யா குவித்துள்ள நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பல பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். தரைப்பரப்பு, வான்வெளி, கடல் என 3 விதமான பரப்புகளிலும் அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

உக்ரைனை ரஷ்யா தாக்கும் பட்சத்தில் அதற்கு பதிலடி தரும் வகையில் அமெரிக்காவும் தயாராகி வருகிறது. உக்ரைனை சுற்றியுள்ள போலந்து, ருமேனியா போன்ற நாடுகளில் அமெரிக்கா தனது படைகளை இறக்கியுள்ளது. 

இதற்கிடையே உக்ரைன் நிலவரம் குறித்து போலந்து அமைச்சருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் வாஷிங்டனில் ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னதாக அமெரிக்காவிலிருந்து போலந்து சென்ற 6 விமானங்கள் அங்கு போர் தளவாடங்களை இறக்கியுள்ளன.

போர் ஏற்பாடுகள் ஒரு புறம் இருக்க மறுபுறம் சமாதான பேச்சுளும் நடைபெற்று வருகின்றன. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் சமரசம் செய்து வைப்பதற்காக அவ்விரு நாடுகளுக்கும் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள் அடுத்த சில நாட்களில் செல்ல உள்ளனர்
 

 

Tags :

Share via