நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

by Editor / 05-02-2022 10:35:59am
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக முதலமைச்சர்  தலைமையில்  அனைத்துக்கட்சி கூட்டம்

நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ள நிலையில் இது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவை ஆளுநர் பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, அந்தச் சட்டமுன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆளுநர் 1-2-2022 அன்று சட்டமன்றப் பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பி வைத்தார். 

இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்து முடிவு செய்திட, 5-2-2022 (இன்று) காலை 11-00 மணி அளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும் ‘ என்று தெரிவித்துள்ளது. நீட் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக கலந்து கொள்ளாது என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை
ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான விளக்கம் விரைவில் அறிக்கையாக அதிமுக வெளியிட உள்ளது.
 

 

Tags : All party meeting chaired by Chief Minister on NEET exemption

Share via