போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் - முதல்வர்  ஸ்டாலின் 

by Editor / 24-06-2021 05:08:24pm
போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் வாபஸ் - முதல்வர்  ஸ்டாலின் 

 

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில் உரை வழங்கினார்
'அப்போது பேசிய அவர், 'திமுக ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக இருக்கும்.
தேர்தல் அறிக்கையில் திமுக 505 வாக்குறுதிகள் அளித்தோம். ஆட்சி பொறுப்பேற்று 49 நாட்களில் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என எங்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. திமுக 505 வாக்குறுதிகள் அளித்தோம். ஆட்சி பொறுப்பேற்று 49 நாட்களில் அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம் என எங்கள் மீது எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி.
'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ், 75 ஆயிரத்து 546 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை இலவசம் என்ற அறிவிப்பால் 20 ஆயிரத்து 500 பேர் பயனடைந்துள்ளனர்.'இல்லை என்பதை இல்லாமல் செய்திருக்கிறோம்'
நாங்கள் ஆட்சிக்கு வரும் போது கரோனா படுக்கைகள் இல்லை, ஆக்ஸிஜன் இல்லை. தற்போது இல்லை, இல்லை எற்கிற சொல்லை இல்லாமல் செய்திருக்கிறோம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தனது பதவி முடிந்தது போல எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். அதன்பின் அவர் எந்த அரசுப்பணியும் பார்க்கவில்லையா..?
மார்ச் 6ஆம் தேதியில் இருந்து தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டது. மார்ச் மாதம் இறுதியில் இருந்து கரோனா இரண்டாம் அலை தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டது. அதிமுக அரசின் மெத்தனப்போக்கால் தான் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்தது.
திமுக அடக்க முடியாத யானை'அடக்கப்பட்ட யானைக்குத் தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை. யானைக்கு 4 கால்கள் தான் பலம், அதுபோல திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம் என தெரிவித்தார்.
 தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவ மையங்கள்அமைக்கப்படும்..
 செய்யாறு, திண்டிவனத்தில் 22ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.- கூடங்குளம் அணுமின் நிலையம், ஹைட்ரோ கார்பன் திட்டம், 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று பேசினார்/

 

Tags :

Share via