.ராமனுக்கு  அஸ்திர புஸ்திர வித்தைகளைக்கற்றுக்கொடுக்கலானார்,விஸ்வாமுத்திரர்.

by Newsdesk / 17-11-2022 07:26:23am
.ராமனுக்கு  அஸ்திர புஸ்திர வித்தைகளைக்கற்றுக்கொடுக்கலானார்,விஸ்வாமுத்திரர்.

ராமா!கொடிய குணம் கொண்ட அரக்கி தாடகையும் அவள் மகன்கள் மாரீசன்,சுபாகு இருவரும் அங்கு உள்ளனர்.அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு வரம்புகளே இல்லை.வேள்வியில் மனித மாமிசத்தையும் குருதியையும்கொட்டி யாகத்தை செய்ய விடாமல் இடையூறு செய்கிறார்கள்.அரக்கி தாடகையை வீழ்த்தும் ஆற்றல் உன்னிடம்மட்டுமே உள்ளது.அதன் பொருட்டே உன்னை அழைத்து வந்தேன் என்று விஸ்வாமித்ரர் கூறினார்.குருவே,தாங்கள்
என்ன ஆணையிடுகிறீர்களோ ? அதை நிறைவேற்ற சித்தமாக உள்ளேன் .என்றான் அவதார புருஷன் ராமன். உடன் தம் குருவின் கட்டளையை ஏற்று வில்லில் நாண் ஏற்றி.அதனை செலுத்த அடர்ந்த வனமே அதிர்ந்தது.பறவைகள்அபாய ஒலி என்று கருதி நாலாப்பக்கமும்  அலறி பறந்தன.விலங்குகளின் ஓசைகள் பெரும் சத்தத்தை கிளப்பின.இப்படிஒரு யுக சப்தத்தை கேளாத தாடகை குகையைவிட்டு வெளியே வந்தாள்.கோபாவேசமாக ஒசை எழுந்த திக்கை நோக்கிச்சென்றாள். மானுட குலத்தை சேர்ந்த மூவரின் வேலை என்பதை அறிய ..வக்ரமும் உக்கிரமும் ஒருங்கு சேர..அவர்களை அழிக்க எண்ணம் கொண்டு பயணித்தாள்.கழுகாக வான்வழி வந்து  அவர்களை நோக்கி பாய்ந்தாள்.வானிலிருந்து பூமி நோக்கி வந்தவளை நோக்கி  ..ராமன்செலுத்தினான் கணையை..விண்ணை பிளந்து சென்ற அம்பு அவள் உடலைத்துண்டு துண்டாக்கியது. மண்ணில் ரத்தமும் சதையும் எலும்புமாக விழுந்தன.தாடகையின்
தேகம்.தேவர்குலமும் மானுடகுலமும் மகிழந்தது.விஸ்வாமித்ரின் அன்பிற்கு ராமன் பாத்திரமானான்.ராமன் பூமியில்அவதரித்ததன் முதல் தொடக்க புள்ளி வைக்கப்பட்டது. ரிஷியோட பயணம் தொடர்ந்தது.ராமனுக்கு  அஸ்திர புஸ்திரவித்தைகளைக்கற்றுக்கொடுக்கலானார்,விஸ்வாமுத்திரர்.
 

.ராமனுக்கு  அஸ்திர புஸ்திர வித்தைகளைக்கற்றுக்கொடுக்கலானார்,விஸ்வாமுத்திரர்.
 

Tags :

Share via