22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மொத்தம் நான்கு ஆட்டங்கள்.

by Editor / 22-11-2022 08:43:46am
 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று மொத்தம் நான்கு ஆட்டங்கள்.

கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இன்று மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடக்கிறது. அதில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 4 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2 போட்டிகளில் அர்ஜென்டினா வெற்றி பெற்றுள்ளது. 2 போட்டிகள் டிரா ஆனது. இதையடுத்து டி பிரிவில் மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் டென்மார்க், துனிசியா அணிகள் மோதுகின்றன. இதனைதொடர்ந்து, இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மெக்சிகோ, போலந்து அணிகள் விளையாடுகின்றன. இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

 

Tags :

Share via