உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை: காலாவதியான உணவு பறிமுதல்

by Staff / 24-11-2022 04:22:05pm
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை: காலாவதியான உணவு பறிமுதல்

தூத்துக்குடியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் ஒரு கடையில் இருந்த 201 கிலோ காலாவதியான உணவு பொருள் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஒரு உணவகத்தில் உறைநிலையில் இருந்த 6 கிலோ சிக்கனையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். காலாவதியான உணவு பொருள் மாநில உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணுக்கு வரப்பெற்ற புகாரை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் தூத்துக்குடி மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர் சக்திமுருகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடி பூபாலராயர்புரத்தில் உள்ள ஒரு கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த கடையில் 201 கிலோ காலாவதியான, லேபிள் இல்லாமலும், போலி முகரியுடன் கூடிய லேபிள் ஒட்டப்பட்ட உணவு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 201 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போலி முகவரியுடன் உணவுப் பொருட்களைப் பொட்டலமிட்டதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு, வழக்கு பதிவு செய்ய உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதே போன்று சிவந்தாகுளம் ரோட்டில் உள்ள உணவகத்தில் ஆய்வு செய்த பொழுது, தயாரிப்பு தேதி இல்லாத, 6 கிலோ உறைநிலையில் இருந்த சிக்கன் மற்றும் நண்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. புகார் மேலும் உணவு வணிகர்கள் காலாவதியான, லேபிளில்லாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது உணவகங்களில் பயன்படுத்தினாலோ, அந்த உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து, தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும் உணவுப் பொட்டலங்களில் காலாவதி தேதி பார்த்து வாங்க வேண்டும். எந்தவொரு கடையாவது காலாவதி உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக அறிந்தால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணுக்கு புகார் அளிக்கலாம். தங்களது விவரம் ரகசியம் காக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 

 

Tags :

Share via