தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

by Staff / 24-11-2022 05:45:50pm
தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆர்.எஸ்.எஸ் முகாம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்துள்ளது. தனியார் பள்ளிகளில் அரசியல், சாதி, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என ஏற்கனவே தடை உள்ளது. மீறி நடந்தால் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo