நூதன முறையில் மோசடி

by Staff / 02-12-2022 05:27:25pm
நூதன முறையில் மோசடி

கோவை வடவள்ளி அடுத்த, அருண் நகர் பகுதியை சேர்ந்தவர் முரளிதரன் என்பவரது, மனைவி 52 வயதான சுனிதா, இவர் பீளமேடு பகுதியில் உள்ள அதுல்தாகூர் என்பவருக்கு சொந்தமான மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் சோலார் பல்புகள்கள் மற்றும் டயர்கள் உள்ளிட்ட பல பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர், இந்த நிறுவனத்தின் கிளை பெங்களூருவிலும் செயல்பட்டு வருகிறது, கடந்த மாதத்தில் இந்த நிறுவனத்தின் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வரும் நிகில் போங்கலே, என்பவருக்கு ராணுவத்தில் இருந்து பேசுவதாக ஒரு அழைப்பு வந்துள்ளது, அதில் தங்களது நிறுவனத்திற்க்கு, சோலார் பல்புகள் மொத்தமாக தேவைப்படுவதாகவும், உங்களிடம் இருந்து மோத்தமாக பல்புகளை வாங்குவதாக கூறிய நபர் கேட்டுள்ளார், இதனைத் தொடர்ந்து நிறுவனத்திலிருந்து அதற்குரிய விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது, அதன் பிறகு தங்களது பணத்தை செலுத்துவதற்கு வங்கி கணக்கு விவரங்களை வேண்டும் என்று, சோலார் பல்புகள் வாங்குவதற்காக கூறிய நபர் கேட்டுள்ளார், உடனடியாக சில வங்கி கணக்குகளை நிறுவனத்தில் இருந்து அந்த நபருக்கு கொடுத்துள்ளனர், இதனை தொடர்ந்து அந்த நபர் ஒரு ரூபாயை சரியாக வருகின்றதா என சோதனை செய்ய அனுப்பி வைத்துள்ளார், சற்று நேரத்தில், உங்களது வங்கி கணக்கில் இருந்து, தனக்கு ஒரு ரூபாயை திருப்பி அனுப்ப கூறியுள்ளார், இதனை தொடர்ந்து இவரும் ஒரு ரூபாயை அனுப்பியுள்ளார், இப்படி அனுப்பிய சில நிமிடங்களில், இவர்களின் வங்கி கணக்கில் இருந்து, நூதன முறையில் 11 லட்சத்து 42ஆயுரத்து 235 ரூபாய் மோசடியில் நபர்களின் வங்கி கணக்கு மாற்றப்பட்டது தெரிய வந்தது, இதனை தொடர்ந்து சுனிதா கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார், புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், நேற்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via