டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

by Editor / 04-12-2022 09:01:11am
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.


டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 5.30 மணிவரை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தி உள்ளன.

மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. கடந்த தேர்தலில் பா.ஜ.க. மாநகராட்சியைக் கைப்பற்றியிருந்தது. வரும் 7ம் தேதி வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. .

மாநகராட்சி தேர்தலில் வாக்களித்த டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநகராட்சி தேர்தலில் 1.5 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். மாநகராட்சியின் முன்னுரிமை நகரத்தை சுத்தமாக வைத்திருப்பது என்பதை மக்கள் மனதில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 15 ஆண்டுகளாக டெல்லிக்கு பாஜக எதுவும் செய்யவில்லை, மக்களுக்காக உழைக்கத் தவறிவிட்டது என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கன் தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் கூறுகையில், “மக்கள் வேட்பாளர்களைப் பார்த்து அதன்படி வாக்களிக்க வேண்டும். காங்கிரஸ் வேட்பாளர்கள் நல்லவர்கள், தேர்தலுக்குப் பிறகு தங்களுக்குக் கிடைக்கும் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார்.

 

Tags :

Share via