தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக சுற்றுலா தகவல் கையேடு வெளியீடு

by Editor / 21-12-2022 09:15:28am
தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக சுற்றுலா தகவல் கையேடு வெளியீடு

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக கொடைக்கானல் சுற்றுலா தலம் பற்றிய கையேடு செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் பற்றி அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் "ஒரு மாதம் ஒரு சுற்றுலா தலம்" என்ற கையேடு வெளியீடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. முதல் கையேடாக கொடைக்கானல் சுற்றுலா தளம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது. இந்த முதல் கையேட்டை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் வெளியிட்டார். அதன் பிரதிகளை முதல்நிலைக் கோட்ட ரயில் இயக்க மேலாளர் ராஜேஷ் சந்திரன், முதுநிலைக்கோட்டை பாதுகாப்பு அதிகாரி முகைதீன் பிச்சை, முது நிலை கோட்ட மின்மயப் பொறியாளர் பச்சு ரமேஷ், அலுவல் மொழி அதிகாரி சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த கையேட்டின் மின்னணு பிரதி தெற்கு ரயில்வேயில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படும்.

 

Tags :

Share via