நெல்லை மாவட்ட மீனவர்கள் மூன்றாவது நாளாக மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

by Editor / 21-12-2022 09:55:18am
நெல்லை மாவட்ட மீனவர்கள் மூன்றாவது நாளாக  மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது. இது அடுத்த இரண்டு நாட்களில் இலங்கை கடற்கைரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் இதன் காரணமாக, இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (புதன்கிழமை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் 2 நாட்களுக்கு தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.கடலில் பலத்த சூறை காற்று வீசும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.நெல்லை மாவட்ட மீனவர்கள் மூன்றாவது நாளாக இன்றும் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.

 

Tags :

Share via