தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

by Staff / 21-12-2022 01:24:42pm
தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி , ரெயில் எண் 06041 தாம்பரம் நாகர்கோவில் அதி விரைவு சிறப்பு ரெயில் 23 - ந்தேதி இயக்கப்படுகிறது. அன்று இரவு 7. 30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரெயில் செங்கல்பட்டு , விழுப்புரம் , விருத்தாசலம் , திருச்சி , திண்டுக்கல் , மதுரை , விருதுநகர் , சாத்தூர் , கோவில்பட்டி , நெல்லை , வள்ளியூர் வழியாக மறுநாள் காலை 7. 10 மணிக்கு நாகர்கோவில் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்து அடையும் மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வேயின் திருவனந்தபுரம் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. மற்றொரு செய்திக்குறிப்பில் , கருநாகப்பள்ளி ரெயில் நிலையத்தில் உள்கட்டமைப்பு பணி இன்று ( புதன்கிழமை ) நடைபெறுகிறது. இதனால் ரெயில் எண் 16525 கன்னியாகுமரியில் இருந்து பெங்க ளூரு கே. எஸ். ஆர். ரெயில் நிலையம் செல்லும் பெங்களூரு ஐலேண்டு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லம் - காயங்குளம் ஜங்ஷன் இடையே 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

Tags :

Share via