ரஜினியின் புதிய படமான கூலி டீசரில் இசை அனுமதி இல்லாமல் பயன்படுத்தி இருப்பதாக நோட்டீஸ்

by Admin / 02-05-2024 12:35:37am
ரஜினியின் புதிய படமான கூலி டீசரில் இசை அனுமதி இல்லாமல்  பயன்படுத்தி இருப்பதாக நோட்டீஸ்

ரஜினியின் புதிய படமான கூலி டீசரில் இசையமைப்பாளர் அனிருத் தன் அனுமதியின்றி தன் இசையை மறு உருவாக்கம் செய்திருப்பதாக கூறி இளையராஜாவின் வழக்கறிஞர் பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளாா்.அதில், ரஜினி நடிக்கும் கூலிபட டீசரில் லோகேஷ் கனகராஜ் இளையராஜாவின் இசையில் வெளியான தங்க மகன் படத்தில் வா வா பக்கம் வா என்ற பாடலின் சில பகுதிகளை அனிருத் அப்படியே பயன்படுத்தி இருப்பதாகவும் இளையராஜாவின் அனுமதி இல்லாமல் பயன்படுத்திருப்பது 1957 மதிப்புரிமைச் சட்டத்தின் படி அது குற்றமாகும் என்றும் இளையராஜாவின் அனைத்து பாடல்கள் மற்றும் இசைகளுக்கான உரிமை அவரிடமே உள்ளதாகவும் அவருடைய அனுமதியின்றி இசையை மறு உருவாக்கும் செய்வது சட்டப்படி குற்றம் என்றும் லோகேஷ் கனகராஜ் இது போன்று இளையராஜாவின் இசை அனுமதி இல்லாமல் அவர் விக்ரம் படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு அனிருத் புகழ்பெற்ற பாடலான ஒய் திஸ் கொலைவெறி என்கிற பாடலும் இளையராஜாவின் வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி பாடலின் அப்பட்டமான காப்பி என்றும் தன்னிடம் முறையாக அனுமதி பெறாமல் தன் பாடலை பயன்படுத்துவது இனி தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via