அமேசான் தலைவருக்கு பெரும் அதிர்ச்சி

by Staff / 06-01-2023 04:43:53pm
அமேசான் தலைவருக்கு பெரும் அதிர்ச்சி

பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக சுமார் 18 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அமேசான் நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பு அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பால், அமேசான் பங்குச் சந்தையில் தனது பங்கு மதிப்பை இழந்தது. இதன் விளைவாக, பெசோஸ் ஒரே நாளில் 670 மில்லியன் டாலர்களை இழந்தார். தற்போது 108 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் 6வது பணக்காரராக உள்ளார்.

 

Tags :

Share via