புதிய வைரஸ் பரவல்

by Staff / 17-01-2023 12:33:51pm
புதிய வைரஸ் பரவல்

குஜராத் வடடோராவில் 25 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் பன்றி காய்ச்சலின் உருமாறிய வைரஸான H3N2 என்ற வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜலதோஷம், ஜுரம் மற்றும் உடல் வலி இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், நெகடிவ் என்று வந்தது. பிறகு மற்ற பரிசோதனைகளில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. இந்த வைரஸுக்கு அதீத பரவும் தன்மை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் இரும்பினாலோ, தும்பினாலோ இந்த நோய் பரவும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு பரிசோதனை செய்ய குஜராத் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via