துப்பாக்கிச்சூடு - குழந்தை பலி

by Staff / 17-01-2023 12:29:36pm
துப்பாக்கிச்சூடு -  குழந்தை பலி

அமெரிக்காவில் மீண்டும் நடைபெற்ற ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டை குறிவைத்து போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. அதிகாலை 3 மணிக்கு நடைபெற்ற இந்த தாக்குதலில் ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். குழந்தையின் தலையில் குண்டு பாய்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via