டெல்டா மாவட்டங்களில் முதல்வர் 4 நாள்கள் சுற்றுப்பயணம்

by Staff / 22-08-2023 05:19:53pm
டெல்டா மாவட்டங்களில் முதல்வர் 4 நாள்கள் சுற்றுப்பயணம்

திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்கு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி, வரும் 24ஆம் தேதி விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் அவர், சாலை மார்க்கமாக திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு செல்கிறார். திருக்குவளையில் 25ஆம் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் தொடக்கி வைக்கிறார். 26ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். 27ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சென்னை திரும்ப உள்ளார்.

 

Tags :

Share via