அரசியலை விட்டே விலக தயார் - அதிமுக வேட்பாளர் சபதம்

by Staff / 26-03-2024 05:09:18pm
அரசியலை விட்டே விலக தயார் - அதிமுக வேட்பாளர் சபதம்

கோவையில் போட்டியிடும் அண்ணாமலை 60% வாக்குகள் வாங்கினால் நான் அரசியலைவிட்டு விலகிக்கொள்கிறேன், கோவை தேர்தல் களத்தில் பாஜக என்ற கட்சி போட்டியிலேயே இல்லை என கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். கோவை தொகுதியை பொறுத்தவரை அதிமுக - திமுக - பாஜக என மும்முனை போட்டி நிலவுகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் மூன்று கட்சிகளை சேர்ந்தவர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via