தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளதாக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி பேட்டி.

by Editor / 20-01-2023 08:43:56pm
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட உள்ளதாக சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப் நந்தூரி பேட்டி.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியான செங்கோட்டை தாலுகா குண்டாறு நீர்த்தேக்கம் பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் சுற்றுலாதுறை இயக்குனர் சந்திப் நந்தூரி, வனத்துறை உயரதிகாரிகள், பொதுப்பணித்துறை உயரதிகாரிகள், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து சுற்றுலாத்துறை இயக்குனர் சந்திப்  நந்தூரி நமது செய்தியாளரிடம் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் உள்ள அணைத்து அருவிகளையும் மேம்படுத்தும் நோக்கில் ரூ15 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. அதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்தப் பணிகள் தொடங்குமென்றும், எனவும் கூறினார். இதேபோன்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் குண்டாறு அணைப்பகுதிகளில் படகு குழாம்.இயற்கை யோடு இணைந்துவாழும் வண்ணம் டென்ட் அமைத்து தங்குதல்.மலையேறும் பயிற்சி,உள்ளிட்ட அனைத்துவகையான சுற்றுலாமேம்பாடுகள் உள்ளிட்ட  சாகச விளையாட்டுக்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் கொரோனோ தொற்றுக்குப்பின்னர் முதல்வரின் முயற்சியினால் இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும்,இந்தியாவிலுள்ள 10 தலைசிறந்த சுற்றுலாத்தலங்களில் 5 பகுதிகள் தமிழகத்தில் உள்ளதாகவும்,தமிழகத்தில் வெளிநாட்டு சுற்றலாப்பயணிகளை கவரும் வண்ணம் சுற்றுலாவை  மேம்படுத்த பல்வேறு முயற்சி நடந்துவருவதாகவும்,கடல்புறசுற்றுலாத்திட்டங்களும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும்,ஜவ்வாதுமலை,கொல்லிமலை,ஊட்டி,ஏலகிரி,உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்துவருவதாகவும்,தாஜ்மகாலைவிட தமிழகத்திலுள்ள மகாபலிபுரத்திற்கு அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாபபயணிகள் வந்து செல்வதாகவும் அவர்  தெரிவித்தார்.

 

Tags :

Share via