ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் களம்காணப்போவது யார்..?

by Editor / 22-01-2023 09:08:04pm
ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் களம்காணப்போவது யார்..?

அண்ணா திமுக கூட்டணியில் இருப்பதாகச் சொல்லப்படும் பாஜக சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலையை ஈரோடு இடைத்தேர்தலில் களமிறக்க பல்வேறு முயற்சிகள் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  சூடுபிடிக்கத்தொடங்கிஉள்ளது...திமுக முதலில் தை அமாவாசைதினத்தில் பிரச்சாரத்தை துவக்கியது.காங்கிரஸ் கட்சியும் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தது.இதற்கிடையே தமிழக அரசியல் களத்தில் பாஜக வைப்பற்றித்தான் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் என மூன்று கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்த தயாராகி விட்டாலும்.இதையடுத்து பாஜக, அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகள்  ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

 இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அதிமுக ஓபிஎஸ்.இபிஎஸ் என இரு அணிகளாக செயல்பட்டு வருவதால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரும் தங்கள் ஆதரவு வேட்பாளரை களமிறக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுது.

இச்சூழலில் காங்கிரஸ் வேட்பாளராக இளங்கோவனை அறிவித்த நிலையில் தமிழக பாஜக இந்த  இடைத்தேர்தலை அவ்வளவு எளிதில் விட்டுவிட விரும்பலை.அதே சமயம் ஆளும் திமுகவும் ஒதுங்கிடவில்லை.

 ஏற்கனவே 14 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இந்நிலையில் பாஜக மற்றொரு விஷயத்தை மேற்கொண்டதாக ஒரு ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

 அதாவது, 15 பேர் கொண்ட ரகசிய குழுவை களமிறக்கி ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்களின் மனநிலை என்னவென்று கண்டறிய ஆய்வு நடத்தியதாகவும்,இந்த ஆய்வுக்குழுவினர் இவர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கள ஆய்வு மேற்கொண்டதாகவும்,அவர்களின் ஆய்வில் கீழ்கண்ட தலைப்புகளை மையம்வைத்து 

இத்தொகுதியில் கள நிலவரம் எப்படி உள்ளது? 

ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள செல்வாக்கு?

 ஆளுங்கட்சி மீது திருப்தியா? அதிருப்தியா?

 பாஜகவின் மீதான நிலைப்பாடு? 

எனப் பல்வேறு தகவல்களை சேகரித்து அதனை தனித்தனியாக பகுப்பாய்வு செய்ததாகவும்,காங்கிரஸ் கட்சியில் உள்ள குழப்பம் கோஷ்டி பூசல் உள்ளிட்டவைகளை,அதிர்ப்தியாளர்களையும் தேடிப்பிடித்து அவர்களது பெயர்பட்டியலையும் தயார் செய்த அந்த ஆய்வுக்குழு முழுமையான கள நிலவரத்தை கவனமாக கையாண்டு டெல்லி மேலிடத்திற்கு அறிக்கையாக அனுப்பி வைத்ததாகவும் ஒருதகவல் வேகமாக உலாவருகிறது.

இந்த நிலையில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக எந்த அலையும் இந்தத்தொகுதியில் இல்லையென்பதும்,காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ்.இளங்கோவனைப் பொறுத்தவரை அவர் மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு இன்னும் இறங்காமல் பண்ணையார் அரசியல் நடத்துவதாகவும் காங்கிராஸார் குற்றம் சாட்டிவருகின்றனர்.இந்த நிலையில்தான் பாஜக தலைமை அதிமுகவின் இரண்டு பிரிவுகளை சேர்ந்தவர்களை அழைத்து பேசி இந்த தொகுதியில் பாஜகவே களமிறங்க வாய்ப்பை உருவாக்கும் என்ற தகவலும் பரவி வருகிறது.மேலும் காங்கிரஸ் தேசிய கட்சி என்பதால் தேசியக்கட்சிஎதிர்த்து மற்றொரு தேசிய கட்சி போட்டியிடுவதே காலசிறந்தது என்ற கருத்தும் முன்வைக்கபட உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன.எது எப்படியோ இடைத்தேர்தல் நெருங்க..தேதியும்.. சுருங்க.. ஈரோடு கிழக்கு தொகுதி  இடைத்தேர்தலில் களம்காணப்போவது  பாஜகவா..இல்லை..ஓபிஎஸ்..தரப்பா ..இல்லை  இ.பி.எஸ்..தரப்பா என்பதைப்பொறுத்துதான் பார்ப்போம்.

 

Tags :

Share via