திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

by Editor / 02-07-2021 03:23:13pm
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு  ஆய்வு

திருவள்ளுவர்  மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், திருக்கோவிலில் நிலுவையில் உள்ள சாலை, கோபுரப்பணிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 2) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் முக.ஸ்டாலின் ஆணையின்படி, 79.9 ஏக்கரிலான திருக்கோவிலின் நிலங்கள் இந்து சமய அறநிலையத்துறை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலங்களின் மதிப்பு ரூ.500 கோடிக்கும் மேலாகும். முருகனின் திருத்தலமான அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடான இந்த முருகன் கோவிலில் பக்தர்களின் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகள் கடந்த காலங்களில் விரைவு படுத்தப்படாமல் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
ஜீலை 1 ஆம் தேதி முதல்வர் தலைமையில் இந்து சமயம் அறநிலையத்துறை வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கு முதல்வர் துறைச்சார்ந்த ஆணையர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தொகுதியின் சட்டபேரவை உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் ஆய்வு மேற்கொள்வதாக கூறியிருந்ததைத் தொடர்ந்து, பல்வேறு பணிகள் தடைபட்டிருந்ததை ஆய்வில் அறிந்துகொள்ள முடிந்தது.
திருக்கோவிலுக்கு புதிய ராஜ கோபுரம் கட்டிய பிறகு அந்த ராஜ கோபுரத்தின் வழியாக முருகனை தரிசித்து செல்வதற்கான படிகட்டுகள் இன்னும் அமைக்கப்படாமல் இருக்கின்றன. அவை ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டு, தொல்லியல்துறை அனுமதிக்காக நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதை விரைவுப்படுத்துவதற்கு சம்பந்தபட்ட அலுவலர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர்களும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.
இத்திருக்கோவிலின் அடிவாரத்தில் குளம் இருக்கின்றன. பக்தர்கள் கிருத்திகை போன்ற நாள்களில் விசேஷமாக நீராட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அந்த குளமும் 9 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளன. தூர்வாரப்படாமல் இருக்கும் இந்த குளத்தின் பணிகளையும் உடனடியாக தூர்வார மேற்கொள்ளப்படவுள்ளது. பக்தர்கள் தங்கும் விடுதிகள் 250-க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய விடுதிகள் உள்ளன. அவைகளும் பக்தர்கள் தங்குகின்ற அளவிற்கு நல்ல சூழ்நிலையில் இல்லாததால் உடனடியாக அதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், முருகன் திருக்கோவில் அடிவாரத்தில் இருந்து மேல் நோக்கி வரும் பொழுது இடையில் இருந்த ஒரு மண்டபம் சிதலமடைந்து அதை அப்புறப்படுத்த இருக்கின்றது. அந்த இடத்திலும் புதியதாக ஒரு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நடைபயணமாக வருகின்ற பாதையில் ஒரு குளமும் பராமரிக்கப்படாமல் சிதலமடைந்துள்ளது.
முருகன் சன்னிதானத்தின் மேற் பகுதியில் ஒரு குளமும் சிதலமைடைந்துள்ளது. அந்த குளத்தினையும் சீர்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வெள்ளித்தேர், தங்கத்தேர் என்று இரண்டு தேர்கள் உள்ளது. அந்த இரண்டு தேர்களும் 8 ஆண்டு காலமாக பழுதுபார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த தேர்களையும் விரைவில் ஓட வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறையின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.

 

Tags :

Share via