கர்நாடகா தேர்தலுக்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி

by Staff / 25-01-2023 11:53:08am
கர்நாடகா தேர்தலுக்கு தயாராகும் ஆம் ஆத்மி கட்சி

சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஆம் ஆத்மி கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகிகள் குழு மாற்றி அமைக்கப்பட்டது. பிருத்வி ரெட்டி தலைவராகவும், சஞ்சித் சாஹ்னி பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முன்னாள் நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் தேர்தல் அறிக்கை கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.டெல்லி மாநகராட்சி தேர்தலில் சிறப்பாக செயல்பட்ட ஆம் ஆத்மி, கர்நாடக தேர்தலிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என களமிறங்கியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடலாம் என ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து குஜராத்திலும் அக்கட்சி முன்னேற்றம் கண்டுள்ளது.

 

Tags :

Share via