காவல்துறையினர் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு முதல்வரை தேர்ந்தெடுங்கள்- வி.பி துரைசாமி

by Editor / 09-02-2023 11:44:33pm
காவல்துறையினர் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு முதல்வரை தேர்ந்தெடுங்கள்- வி.பி துரைசாமி

காவல்துறையினர் உங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு முதல்வரை தேர்ந்தெடுங்கள்.அது 2026 ஆக இருந்தாலும் சரி.2024 ஆக இருந்தாலும் சரி.திருவாரூரில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி துரைசாமி பேச்சு

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த  விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கவிய ரசன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பங்குபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் படுகொலைக்கு காரணமான பாஜக நிர்வாகிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் திருவாரூர் தெற்கு வீதியில் வி.சி.க ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அதே இடத்தில் பாஜக சார்பில் பட்டியல் இன மக்களை பா.ஜ.க வில் இருந்து பிரிக்க நினைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கண்டித்தும் தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாத திமுக அரசை கண்டித்தும் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய பாஜக மாநிலத் துணை தலைவர் வி.பி துரைசாமி காவல்துறையினர் உங்கள் குடும்பத்தில் இருந்து காவல்துறை குடும்பத்திலிருந்து ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுங்கள். அது 2026 ஆக இருந்தாலும் சரி. ஒன் நேசன் ஒன் எலக்சன் 2024ல் வந்தாலும் சரி.உங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு முதலமைச்சரை தேர்ந்தெடுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.இதில் பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via