39 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்-டிடிவி தினகரன் பேட்டி.

by Editor / 02-04-2024 11:24:22pm
39 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்-டிடிவி தினகரன் பேட்டி.

அதிமுக திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாகவும் சீமானை தான் நண்பனாகவே பார்ப்பதாகவும் தென்காசியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தேனி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் டிடிவி தினகரன் பேட்டி.

இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தென்காசியில் பாஜக வேட்பாளராக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் ஆன ஜான் பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவாது

தமிழ்நாட்டின் வளர்ச்சி தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்கள் விரோத ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்கு ஒரு முன்னோட்டமாக இந்த பாராளுமன்ற தேர்தலில் மோடி அவர்கள் தலைமையிலான கூட்டணிக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும்.


சிறப்பான முறையில் தேர்தல் பணி ஆற்றி கொண்டு இருக்கிறோம் மக்களுடைய வரவேற்பு பிரகாசமாக இருக்கிறது 39 தொகுதியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் எனவும்

கச்சத்தீவு பிரச்சனை 10 ஆண்டுகளாக தினமும் மீனவர்கள் பிரச்சனை பிரதமரிடம் கொண்டு செல்லப்பட்டு போராடி அவர்களை எல்லாம் விடுதலை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது இதற்கெல்லாம் 1970இல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அன்றைக்கு முதலமைச்சர் கருணாநிதி அவர்களும் தான் இந்த மாபெரும் வரலாற்றுப் பிழைக்கு காரணம்.

 அதிமுக திமுகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளதகவும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி விவசாயி சின்னம் கேட்டு பெற்ற சின்னமல்ல கொடுக்கப்பட்ட சின்னம் தான் எனவும்

கரும்பு விவசாய சின்னத்தை சீமானுக்கு கொடுக்க கூடாது என்று நான் சொல்லவில்லை அரசியல் உள்நோக்கம்  இன்றி விதிகளின்படி தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கி உள்ளதாகவும்.

சட்ட மன்ற உறுப்பினர்களைக் அடைத்து வைத்தோம் என கூறுவது காழ்ப்புணர்ச்சியால் கூறுவது எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவின் கைதின் போது தானாகவே சென்று ரிசாட்டில் கூடியிருந்ததாகவும்.

அதிமுகவை மீட்டெடுப்பது தான் நோக்கம் சீமானை தான் எதிரியாக பார்க்கவில்லை எனவும் சீமானை தான் எதிரியாக பார்க்கவில்லை எனவும் நண்பனாக தான் பார்ப்பதாகவும்

விஜய் சேதுபதியின் மக்கள் செல்வன் பட்டத்தைக் கொண்டு தன்னை தொண்டர்கள் அழைப்பதாக கூறுகின்றார்கள் இந்த பட்டமானது எனக்கு 2000 இல் மக்களால் தனக்கு கொடுக்கப்பட்டதாகவும் விஜய் சேதுபதி எப்போது நடிக்க வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் நல்ல நடிகர் என்பதையும் குறிப்பிட்டார்.


எங்களை தாமரை சின்னத்தில் நிற்க யாரும் நிர்பந்திக்கவில்லை,மோடி உலகம் கண்டு வியக்கும் தலைவர் செய்த சாதனையால் 3 வாது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் மோடியை உதயநிதி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

அண்ணாமலை சொல்வது போல  தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடி கள்ளுகடைகளை திறக்க படும்.ஆர் பி உதயகுமார் குறித்து கேள்வி எழுப்பியபோது  நாய் நன்றி உள்ள மிருகம் இவரை நாயோடு ஒப்பிட்டால் நாய் கோபித்துக் கொள்ளும். நாய் சிங்கமாக மாறாது ஓநாயாக வேண்டுமென்றால் மாறும் என கூறினார்.

தமிழ்நாட்டில் இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருவதாகவும்,சமீபத்தில் பிரதமர் தமிழகத்தில் சுட்டி காட்டியது போல ஆளும் கட்சியின் துணையோடு போதை பொருள் விற்பனை நடைபெறுவதாகவும்.

மத்திய அமைச்சரவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம்பெருமா என்ற குறித்த கேள்விக்கு தேனி மற்றும் திருச்சியில் வெற்றி பெறுவதே தான் நோக்கம் எனவும் மக்களுக்கான தேவைகளை பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் பாராளுமன்றத்திற்கு எடுத்துச் செல்வதும் மட்டுமே நோக்கம் எனவும் அமைச்சரவையில் இடம்பெற ஆசை இல்லை என்னும் தெரிவித்தார்.
 

 

Tags : டிடிவி தினகரன் பேட்டி.

Share via