பரவும் புதிய வைரஸ்

by Staff / 14-02-2023 04:33:03pm
பரவும் புதிய வைரஸ்

உலகம் முழுவதும் ஏற்கனவே பல வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவத் தொடங்கியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏற்பட்டுள்ள இந்த மார்பர்க் வைரஸ் பரவலால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் "எபோலா" நோயை ஒத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், சோர்வு, தலைவலி மற்றும் இரத்த வாந்தி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வைரஸுக்கு தடுப்பூசி இல்லை என்றும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

 

Tags :

Share via