முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 70வது பிறந்தநாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து.

by Editor / 01-03-2023 09:28:44am
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 70வது பிறந்தநாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைச்சாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “70-வது பிறந்தநாள் காணும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீண்ட ஆயுளுடனும், நிறைந்த ஆரோக்கியத்துடனும் வாழ பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories