சிறப்பு மருத்துவ முகாமில் 2967 பேருக்கு பரிசோதனை

by Staff / 11-03-2023 01:07:37pm
 சிறப்பு மருத்துவ முகாமில் 2967 பேருக்கு பரிசோதனை

இன் புளூயன்சா எச். 3, எச். 2 வகையைச் சேர்ந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவு கிறது. தமிழகத்தில் இந்த காய்ச்சல் பரவாமல் தடுக் கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. இதை யடுத்து நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடந்தது. 9 ஒன்றியங்களிலும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமாக ஒவ் வொரு கிராமமாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி களிலும் அங்கன்வாடி மையங்களி லும் டாக்டர் குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.நேற்று மாவட்டம் முழு வதும் 2967 பேருக்கு பரிசோ தனை மேற்கொள்ளப் பட்டது. இதில் 10 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிய வந்துள்ளது. 85 பேர் சளியால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறார்கள்.
இன்று 2-வது நாளாக மருத்துவ குழுவினர் கிராமம் கிராமமாக சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார் கள். 9 ஒன்றியங்களில் 27 இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூல மாக சிகிச்சை அளிக்கப் பட்டது. 36 பள்ளிகளிலும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். பள்ளி மாணவ- மாணவி களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளு மாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via