இருசக்கர வாகன தீவைப்பு போலீசார் விசாரணை

by Staff / 14-03-2023 02:59:44pm
இருசக்கர வாகன தீவைப்பு போலீசார் விசாரணை

தூத்துக்குடி துறைமுக சாலையில் எடை மெஷின் ஊழியர்கள் மற்றும் லாரி டிரைவர்கள் இடையே மோதல் இருசக்கர வாகனத்திற்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான லாரிகள் துறைமுக சாலையில் நிறுத்தம்: சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தெர்மல் நகர் காவல் துறையினர் தூத்துக்குடி சாலையில் டெல்டா நிறுவனத்திற்கு சொந்தமான எடை மேடை இயந்திரம் உள்ளது.. டெல்டா நிறுவனம் துறைமுகத்திலிருந்து நிலக்கரி தூத்துக்குடி மேல அரசடி பகுதியில் அமைந்துள்ள கோஸ்டல் எனர்ஜன் அனல்மின் நிலையத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் லாரிகள் மூலம் செல்லப்படும் கரிகள், துறைமுகத்தில் அமைந்துள்ள டெல்டா நிறுவனத்திற்கு சொந்தமான எடை மேடையில் எடை போட்டு செல்வது வழக்கம்.இந்த எடை மேடையில் கரி ஏற்றுவதற்காக எடை போட வந்த அன்னை வேளாங்கண்ணி என்ற லாரியை தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்த பேச்சு குட்டி என்ற லாரி டிரைவர் ஓட்டி வந்துள்ளார். கூடுதல் நடை அடிக்க வேண்டிய அவசரம் காரணமாக லாரி டிரைவர் பேச்சு குட்டி எடை மெஷினில் வேலை பார்த்த ஊழியர்களிடம் விரைவாக சீட்டு வழங்குமாறு கேட்டுள்ளார்.இதை தொடர்ந்து லாரி டிரைவர் பேச்சுகுட்டி மற்றும் எடை மெஷினில் இருந்த ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது.இதற்கு பின்பு எடை மெஷினில் இருந்த ஊழியர்கள் எடை மேடையை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டனர் இதைத்தொடர்ந்து பேச்சு குட்டி உள்ளிட்ட 5 லாரி ஓட்டுநர்கள் எடை மெஷினில் வேலை பார்த்த ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை வெளியே தூக்கி சென்று தீ வைத்து கொளுத்தி உள்ளனர்.இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறை வாகனம் விரைந்து வந்து தீயை அணைத்தது.இதைத் தொடர்ந்து தெர்மல நகர் காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சாலையில் விசாரணை நடத்தி வருகின்றனர் இதன் காரணமாக தூத்துக்குடி துறைமுக நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் வரிசையாக காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

 

Tags :

Share via