மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

by Staff / 15-03-2023 01:06:27pm
மார்ச் 26 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தியாவில் ’இன்ஃபுளூயன்சா-ஏ’ வைரஸின் துணை வைரஸான ’H3N2’ வகையால் ஏராளமானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். புதிய வகை வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவி வருவதால், புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, நாளை (16.03.2023) முதல் 26.03.2023 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே இறுதித்தேர்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. வரும் ஏப்ரல் 17 முதல் 24ஆம் தேதிக்குள் இறுதித் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo