பொங்கல் பண்டிகைப்பொருட்கள் விற்பனையால் களை கட்டிய தென்மாவட்டங்கள்.

by Editor / 14-01-2023 09:49:27pm
பொங்கல் பண்டிகைப்பொருட்கள் விற்பனையால் களை கட்டிய தென்மாவட்டங்கள்.


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தென்மாவட்டங்களில் பகுதிகளில் பொங்கல் வியபாரம் களைக்கட்டியது. மேலும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு பலபகுதிகளில் இன்று சிறப்புச் சந்தைகள்  போடப்பட்டிருந்ததை தொடர்ந்து சுற்றுவட்டாரப்பகுதிகளைசேர்ந்த  கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நகரப் பகுதியில் வந்து கரும்பு மஞ்சள் குலை,கோலப்பொடி காய்கறிகள், வாழைத்தார்,வாழையிலை,பூக்கள்,பனைக்கிழங்குகள்,மண்பானைகள்,மண் அடுப்புக்கள் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் திரளாக வந்து வாங்கிச் சென்றனர். 15 எண்ணம் கொண்ட ஒரு கட்டு கரும்பு 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் கரும்புக்கட்டின் விலை நேரம் ஆக ஆக குறைந்து ஒரு கரும்பு கட்டின் விலை 300 ரூபாய்க்கு குறைந்தது, ஒரு கரும்பு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஐந்து கரும்பு 100 ரூபாய்க்கு என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டது கரும்பு அதிக அளவில் கொண்டூவந்து ஏராளமான வியாபாரிகள் குவித்ததால் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்தது. மேலும் அனைத்து பொருட்களும் மிகவும் குறைந்த விலையில் மாலை வேலைகளில் பொது மக்களுக்கு கிடைத்தது, ஏராளமான வியாபாரிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து சென்ற வண்ணம் இருந்ததன் காரணமாக ஏராளமான மக்கள் பஜார் பகுதிகளில் திரண்டதால் போக்குவரத்து நெரிசலும் உருவானது.

 

Tags :

Share via