கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை  இ.பாஸ்-மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி

by Editor / 05-05-2024 11:06:26pm
கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை  இ.பாஸ்-மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் "epass.tnega.org" என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார். மேலும் இ-பாஸ் பார்கோடு சோதனைக்கு பிறகே உதகைக்கு வருபவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்தியில் வாகனங்களை முறைப்படுத்தவே இ-பாஸ் நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இ-பாஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது என தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. வெளி மாநில, வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது.

 

Tags : கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை  இ.பாஸ். 

Share via