ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்:  ஜூலை 31–க்குள் அமல்படுத்த  உயர்நீதிமன்றம்  உத்தரவு

by Editor / 29-06-2021 06:16:26pm
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம்:  ஜூலை 31–க்குள் அமல்படுத்த  உயர்நீதிமன்றம்  உத்தரவு



ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தாத மாநிலங்கள் ஜூலை 31 ந்தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெறமுடியுமோ, அவற்றை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும்.
இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31 ந்தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்ஆர் ஷா அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
முறைசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களை பற்றிய விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து கொள்வதற்கான திட்டத்தை தயாரித்து ஜூலை 31 ந்தேதிக்குள் வெளியிட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தொடர்பான திட்டத்தை மாநில அரசுகள் தயாரிக்க வேண்டும்.புலம்பெயர் தொழிலாளர்களுக்கான திட்டத்தை கொரோனா பெருந்தொற்று முடியும் வரை செயல்படுத்த வேண்டும். மாநில அரசுகளுக்கு, கூடுதலான உணவு தானியங்களை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

Tags :

Share via