சிக்கன் பிரியாணியில் புழு: வைரல்

by Staff / 22-03-2023 02:35:06pm
சிக்கன் பிரியாணியில் புழு: வைரல்

புதுச்சேரி நகரப்பகுதியான 45-அடி சாலையில் பிரபல பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இதனிடையே இந்த பிரியாணி கடையில் பிரியாணி பார்சல் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர் ஒருவர், வீட்டில் சென்று சாப்பிடும் போது பிரியாணியில் துர்நாற்றம் வீசியது மட்டுமின்றி, அதிலிருந்து சிக்கனில் புழு கிடந்தாக தெரிகிறது. இதையடுத்து மீண்டும் பிரியாணி கடைக்கு வந்த வாடிக்கையாளர் கடையின் உரிமையாளரிடம் புகார் தெரிவித்து இச்சம்பவம் தொடர்பாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via